Suzhi
Suzhi is an attempt to encourage the development of technical writing skills in tamil. We request all budding authors to make brave and write articles here. Since this is a wiki, others are always ready to pitch in and correct grammar, syntax, spelling and vocabulary. If you know how to write it in tamil - do so. If you dont, try to do so, what you cant express in tamil, express in english. Someone will come forward to correct your phrase. If our experiment is successfull, we hope to start bringing out a technical foss magazine in tamil and hope to encourage the same effort in other Indian languages also.
சுழி
கணினித் தொழில்நுட்பத்தை தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல மேற்கொள்ளப்படும் பலமுயற்சிகளுள் தலையாய பங்கு வகிக்கப் போகிற ஒரு துறைக்குப் போடப்பட்டுள்ள சுழி இம்முயற்சி.
கட்டற்ற மென்பொருட்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில், அதனை மக்களிடம் கொண்டு செல்லும் பெரும்பங்கு நம்மிடையே உள்ளது. மக்களிடையே இவ்விஷயங்களைக் கொண்டுச் செல்ல இத் தொழில் நுட்ப விஷயங்களையெல்லாம் தமிழாக்கம் செய்வது மிகவும் அத்தியாவசமாகிறது.
செயலிகளின் முகப்பை பலர் முனைந்து மொழிபெயர்த்து வந்தாலும் அதன் பயன்பாடுகள் குறித்த கோப்புகளைத் தமிழாக்கம் செய்தால் தான் முழுப் பலனையும் தமிழ் சமுதாயம் அடைய முடியும். அதற்காகப் போடப்பட்ட சுழிதான் இது.
தொழில்நுட்ப விஷயங்களை தமிழில் எழுத ஊக்குவிக்கும் கேந்திரமாக "சுழி" செயல்படும். மாணவர்கள், பொறிஞர்கள் முதலிய எவரும் இதில் பங்குக் கொள்ளலாம். தொழில்நுட்ப விஷயங்களை தமிழில் எழுதும் ஆர்வமும் ஊக்கமும் இருந்தால் போதும்.
இதெல்லாம் சாத்தியமா என யோசிக்கிறீர்களா? ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாசுரங்களைக் கொண்ட வியாச பாரதத்தை வில்லிபுத்தூரார் தனி மனிதராய் தமிழாக்கம் செய்தார். கவிச்சக்கரவர்த்தி காளிதாசனின் சாகுந்தலத்தை மறைமலை அடிகள் தமிழாக்கித் தந்தார். எண்ணித் துணிக கருமம் என்கிறார் வள்ளுவர்.
இன்னும் என்ன யோசனை? பயனர் கணக்கொன்றைத் துவக்கி தங்களின் முதற் சுழி போடுங்கள்!
தற்போதைய பங்களிப்புகள்
|
புதிய சாத்திரம் வேண்டல் - பாரதி |
||
|
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். |